பக்கம்:அறநெறி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அறநெறி

3. முயற்சியுடைமை

ஆடுகோ டாகி அதரிடை கின்றதுாஉம் காழ்கொண்ட கண்ணே களிறனைக்கும் கந்தாகும் வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான் தாழ்வின்றித் தன்னைச் செயின்

-நாலடியார்; தாளாண்மை; 2 (192)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்

(-குறள் 616)

முயற்சி என்பது ஒருவனை முடிநிலைக்கு உயர்த்தும் திறம் சான்றதாகும். தாள் என்றால் கால், அடி, பாதம் என்பதாகும். காலின் செயலை முயற்சி என்றனர். தாளாண்மை என்றால் முயற்சியுடைமை என்றாகும். ஒருவர் வாழ்க்கையில் உயர முயற்சி தேவை. முயன்றால் உலகில் முடியாப் பொருள் இல்லை என்பர். ஒரு குடியின் பெருமையினை உயர்த்தப் பாடுபட்டு உழைக்கும் ஒருவனுக்குத் தெய்வமே துணைக்கு வந்து சேரும் என்பர் திருவள்ளுவர்.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் 畢

s -(குறள் 1023) திருவள்ளுவர் மேலும் சொல்லுவார்

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும் -(குறள்-6:19) இதுமட்டும் அல்ல; விதி என்ற ஒன்றையும் எஞ்ஞான்றும் முயற்சி மேற்கொண்டு உழைப்பவர் வெல்லுவர் என்ற பொருளில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/62&oldid=586950" இலிருந்து மீள்விக்கப்பட்டது