பக்கம்:அறநெறி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

А.ст. 61

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்

-(குறள் 620)

என்றும் கூறிப் போந்தார்.

ஊக்க முடைமை ஆக்கத்திற் கழுகு

என்கிறது கொன்றைவேந்தன் (86). முயற்சியுடையோரின் சிறப்பினைப் பழம் பாடலொன்று பலபடியாகப் பேசுகின்றது.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்-செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ண்ாயி னார் எனவே முயற்சி சிறக்க வாழ்பவர் அந்நிலைக்கு விர எப்பாடுபட்டிருக்க வேண்டும் என்பதனை அறியலாம்.

உறுதியற்று அசைகின்ற கொம்பினையுடையதாக வழியிலே நின்ற இளமரமும் உறுதி வாய்ந்த மரமாகக் காலப்போக்கிலே வளர்ந்த பிறகு, ஒரு பெரிய யானை யினைக் கட்டுவதற்குரிய கட்டுத்தறியாகவும் ஆகும். அது போல் ஒருவன் தன்னை எல்லா வகையாலும் குறை வற்றவனாகச் செய்து கொள்வானேயானால், அவன் வாழ்க்கையும் அவ்வாறே சிறப்புறுவதாக அமையும் என்று நாலடியார்ப் பாட்டு ஏற்றமுடன் எடுத்துரைக்கின்றது.

சிறுசெடியாக இருக்கும்பொழுது வளையும் தன்மை யுடைய ஒன்று காலப் போக்கில் வளர்ந்து உறுதியுடைய தாகிறது. அசையும் நிலையில் இருந்த செடி, இன்று அசையா நிலைக்கு, யானை கட்டினாலும் அசைய முடியாத நிலைக்கு மரமாக மாறிவிட்டது. எனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/63&oldid=586951" இலிருந்து மீள்விக்கப்பட்டது