பக்கம்:அறநெறி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 அறநெறி

“முயற்சி யுடையார் இகழ்ச்சி யடையார்” என்றபடி முயற்சி முன்னேற்றங்களை முறையே தரும் பெரும்ை சான்றதாகும். மேலும் உழைக்காமல், முயற்சி மேற் கொள்ளாமல் சோம்பேறியாக இருக்கும் ஒருவனிடம் எந்த ஆக்கமும் உண்டாகாது. “தெண்ணிர் தாம் தந்தது உண்ணலின் உளங்கினிய இல்’ என்பர். அதாவது முயற்சியால் கிடைப்பது எளிய பொருளாக இருந்தாலுங் கூட அதனை உண்ணும்பொழுது ஏற்படும் இன்பம் அளவற்றதாக இருக்கும். o

முயற்சியற்றவர்கள் எவ்வளவுதான் ஆற்றல் உடைய வராயிருப்பினும் பயன் இல்லை; முயற்சி மேற்கொள்பவர் தொடக்கத்தில் ஆற்றல் குறைந்த வராயிருந்தாலும், படிப்படியே அவர்கள் பல வெற்றிகளைப் பெற்று உயர்வரி என்பது உறுதி. -

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு

(குறள்-212) என்பர் வள்ளுவர். முயற்சியுடையவரே பிறருக்கு உதவி செய்யும் நிலைக்கு உயரமுடியும். “அலைகள் ஓயாமல் மோதும்போதும் கற்பாறை போன்று மனவலிவோடு இரு; அது தன்னைச் சூழ்ந்துள்ள நீரின் வேகத்தை அடக்குவது போல முயற்சியுடைய வரும் ஒருநாள் துன்பங்களையும் தொல்லைகளையும் வென்று வெற்றிபெறுவர்” என்று அறிஞர் உரைப்பர். வலிமைமிக்க புலியேயாயினும் தனக் கேற்ற இறைச்சியாகிய இரை கிடைக்கப் பெறாமையால் ஒரு நாளைக்குச் சிறிய தவளையையும் கூடப் பிடுத்துத் தின்னும்; அதனால் ஒருவர் எத்தொழிலையும் அற்பமான தொழிலென்று கருதக்கூடாது; ஏனென்றால் அவ்வற்பமான தொழிலே ஒருவனுடைய முயற்சியால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/64&oldid=586952" இலிருந்து மீள்விக்கப்பட்டது