பக்கம்:அறநெறி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 63

மேலான தொழிலாக அமைந்துவிடும் என்ற கருத்தில் சமண முனிவர் ஒருவர் பாடிய பாட்டொன்றினை நாலடியாரிற் காணலாம்.

உறுபுலி ஊனிரை இன்றி ஒருநாள் சிறுதேரை பற்றியும் தின்னும்-அறவினால் கால்தொழில் என்று கருதற்க: கையினால் மேல்தொழிலும் ஆங்கே மிகும்

-நாலடியார் : 193

எனவே ஒருவன் கலங்காது தான் மேற்கொண்ட செயலில் ஊக்கம் குறையாது, தூக்கத்தையும் விடுத்துச் செயலாற்ற வேண்டும். அவ்வாறு கொண்ட கருமமே குறிக்கோளாக இருந்தால் வெற்றித்தேவதை அத்தகைய முயற்சியுடைய வனுக்கு வாகை சூட்டுவது இயல்பு.

எங்குப் பிறப்பினும் எத்தகைய பிறப்பாயிருப்பினும் பிழையில்லை. தம் முயற்சியால் உழைத்து முன்னுக்கு வர வேண்டும். “உழப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ என்பர். எனவே உழைக்க உழைக்க, சோம்பலின்றிச் செயலாற்றச் செயலாற்ற உயர்வு என்பது உறுதியாகக் கிடைக்கும். விதியையும் வெல்லலாம்: ஊழையும் உப்பக்கம் காணலாம். தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும், முயற்சி திருவினையாக்கும் என்றெல்லாம் ஆன்றோர் அருளியுள்ளதற்கிணங்கவே நாலடியாரும்,

ஆடுகோ டாகி அதரிடை கின்றது.உம் காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும் வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான் தாழ்வின்றித் தன்னைச் செயின்

என்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/65&oldid=586953" இலிருந்து மீள்விக்கப்பட்டது