பக்கம்:அறநெறி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பர். 63

என்றோர் கவிஞர் குறிப்பிட்டார். “எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்’ என்று. பாரதி குறிப்பிட்டதனையும் ஈண்டு நினைவிற் கொள்ளுதல் வேண்டும். எந்தச் செயலை மேற்கொண்டாலும் அதை நிறைவேற்ற முயலும்பொழுது தெய்வ சந்நிதானத்தில் நிற்பது போல உணரவேண்டும். தெய்வச் சந்நிதியில் நிற்கும்பொழுது, யானும் நீயுமாய் ஏகபோகமாய் என்று ஆன்றோர் அருளியவாறு போல, எப்படி தெய்வச் சிந்தனையில் ஒன்றிவிடுகின்றோமோ, அதுபோல் நாம் மேற்கொள்ளும் செயலோடு ஒன்றிவிட வேண்டும். “செம்மை சிறக்க அகத்தும் புறத்தும்” என்றாற்போல ஒரு முழுமை-ஆங்கிலத்தில் Perfection என்று சொல்கிறார் களே அந்தச் செம்மை அந்த நிறைவு செயலில் சிறக்க வேண்டும்.

சிலர் செயலை ஏனோ தானோ என்று செய்வார்கள். எப்படியோ ஒரு வழியிற் செயலை முடிப்பார்கள். அதில் ஒர் அழகோ ஒழுங்கோ புலப்படாது. அப்படிப்பட்டவர் களை மேலோர் பாராட்ட மாட்டார்கள். அவர்களுக்கு மேற்கொண்டு வாய்ப்பையும் வசதியையும் வழங்க மாட்டார்கள். அதனால் அவர்கள் பிறரால் இகழப்படு வதற்குக் காரண கர்த்தர்களாக ஆகி விடுவார்கள்.

எந்தச் சிறு செயல் ஒருவரிடத்தில் ஒப்படைக்கப் பட்டாலும், அச்செயலை ஒரு முறையோடு செம்மை சிறக்கச் செய்வதற்குப் பாடுபட வேண்டும். மேலும் ஒருவர் அவர் மேற்கொள்ளும் செயல் திறமையால், செயலாற்றும் பண்பால் அளக்கப்படுவதனால் அந்தச் செயலை அரைகுறையாக அன்றிச் செம்மையாக, திருத்த மாகச் செய்யவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/67&oldid=586956" இலிருந்து மீள்விக்கப்பட்டது