பக்கம்:அறநெறி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 அறநெறி

செய்வன திருந்தச் செ tử”- Do well what you have to do) என்பதற்கியைப நம் நாட்டவர்கள் செயல் சிறக்கப் பாடுபடுவார்களேயானால் உலகின் முன்னணி நாடாக இந்திய விளங்கும். மேலை நாடுகள் சென்று வருபவர்கள் அங்கெல்லாம் செய்வன திருந்தச் செய்பவர்களை, செயலைச் செம்மையுடன் (3 மற்கொள்ளும் திறமுடையவர் களைச் சந்திக்கிறார்கள். இரண்டாம் உலகப் பெரும் போரில் முற்றிலும் அழிவுக்குள்ளான நாடுகளான ஜப்பானும், ஜெர்மனியும் இன்று உலகில் முன்னேறி யிருப்பதற்குக் காரணம், அந்நாடுகள் அழிவினின்றும் தங்களை விடுவித்துக் கொண்டு தாங்கள் செய்யும் தொழிலால் சிறந்து, நன்கு ,ாடுபட்டு முன்னேறி விட்ட தைக் காண்கிறோம். ஜப்பானின் தொழில் வளர்ச்சியைக் கண்டு உலகமே வியக்கிறது. ஜெர்மனி அறிவியல் துறை யில் பெரிதும் முன்னேறிய நாடு என்று போற்றப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம், அந்நாட்டு மக்கள் தாங்கள் மேற்கொள்ளும் செயலில் திருத்தமும் செம்மையும் காட்டுவதுதான் காரணங்களி’ ாகும்.

நாட்டு வாழ்க்கையிலச் மித் தனிமனித வாழ்க்கை யிலும் இதனையே நாம் உண்மை எனக் காணலாம். காந்தியடிகள் எந்தச் ஒசயலைத் தொடங்கினாலும் உன்னார்ந்த மெய்ம்மையோடு, பிசிறின்றிச் செம்மையும் தெளிவும் தோன்றச் செயலாற்றினார். அதனால் ஒரு பெரிய பேரரசே அவருக்குத் தலை வணங்கியது. திருமுறைச் சான்றோர்களு” ஆழ்வாராதிகளும் ஆற்றிய செயல் செம்மையினாலே"ே பழம்பெரும் சமயங்களும் மக்களும் பக்திக் காலத்தி’ மறுமலர்ச்சி கண்டார்கள். எனவே செய்வன திருந்திச் செய்தால் வாழ்க்கையில் வெற்றி உறுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/68&oldid=586960" இலிருந்து மீள்விக்கப்பட்டது