பக்கம்:அறநெறி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. புத்தாண்டுச் சிந்தனைகள்

நாம் வாழ்வதற்கு மூன்று நன்றாக இருக்கவேண்டும் என்று கூறுகின்றார் டாக்டர் மு.வரதராசனார் ஒன்று. நம் உள்ளம். அது நன்றாக இருப்பதற்காகவே அறநெறியும் கடவுள் வழிபாடும் அமைந்தன. மற்றொன்று உடம்பு. அது நன்றாக இருப்பதற்கு நல்ல உணவும் உடையும் தொழிலும் மருந்தும் வேண்டும். மூன்றாவது சுற்றுப்புறம். அது நன்றாக இருப்பதற்கு முன்னோர்கள் சில கட்டுப்பாடு கள் ஏற்படுத்தினார்கள். இன்று சுற்றுப்புறமும் நன்றாக இல்லாத காரணத்தால்தான், பொதுவாக வாழ்க்கையில் அமைதியும் இன்பமும் இல்லை என்பது பேராசிரியர் மு.வ. அவர்களின் கருத்தாகும். அதனால்தான் அவர், “யாராவது ஒரு பெரியவரிடத்திலாவது ஒரு சிறந்த புத்தகத்திலாவது நம்பிக்கை வைத்து மனத்தைக் கொடுத் திருக்க வேண்டும், அல்லது ஒத்த உரிமையோடு யாரிட மாவது திறந்த மனத்தோடு பழகியிருக்க வேண்டும்’ என்று கூறுவர்.

தனிமனிதன் இன்புற வேண்டுமானால் சமுதாயம் நன்றாக அமைந்திருக்க வேண்டும். சமுதாயம் என்ற சொல்லே ஆறறிவு படைத்த மக்களினத்தோடு பிணைந்து நிற்கும் ஒன்று. கூடி வாழ வழி அமைக்கும் முறை சமுதாய அடிப்படை. மனிதனே சமூகத்தின் உயிர்நாடி.

அ.-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/7&oldid=586963" இலிருந்து மீள்விக்கப்பட்டது