பக்கம்:அறநெறி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 69

பேச்சு, எழுத்து ஆகிய இரண்டனுள் பேச்சுதான் உடனடி வெற்றியைத் தரும். எழுத்து பயனளிக்கக் காலம் கடக்கும். மனிதருள் மாணிக்கம் நேருவின் பேச்சு, வங்காள இளஞ்சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போவின் பேசிசு, திலகரின் பேச்சு, சுப்பிரமணிய சிவாவின் பேச்சு, தீரர் சத்தியமூர்த்தியின் பேச்சு, அறிஞர் அண்ணாவின் பேச்சு இவையனைத்தும் நாட்டு மக்கள் நெஞ்சில் இன்றும் நின்று நிலவுகின்றன. சமயத்துறை எனில் திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் சுவாமிகளின் பேச்சை இன்றும் பலர் நினைவு கூர்ந்து வியப்புக் கடலில் ஆழ்கின்றார்கள். எனவே நாக்கின் திறத்தால் நாட்டு மக்கள் நெஞ்சில் இடம் பிடிக்க முடியும் என்றாகிறது.

இந்திய நாட்டின் வரலாற்றில் அதிலும் குறிப்பாக விடுதலைப் போரில் நா அசைந்தால் நாடு அசைந்த திறம் காணப்பட்டது. ‘வெள்ளையனே வெளியேறு டெல்லி நேர்க்கிச் செல் என்று விடுதலை வேண்டிநின்ற மக்களுக்கு அரசியல் தலைவர்கள் அருளிய தாரக மந்திரங்கள் வெறிக்கொள்ளச் செய்து, அவர்கள் உணர்வுகளை இயக்கி இறுதியில் வெற்றி தேடித் தந்தன. வேறு எத்துறையினைக் காட்டிலும் நாக்கின் பயன் அரசியல் துறையில் உடனடி வெற்றியை வழங்கி நிற்கக் காணலாம். எனவேதான் கொடிய படைக்கலன்கள் பலவற்றைக் கொண்டிகுந்த, கதிரவன் மறைவதைக் காணாத பேரரசு என்று புகழப்பட்ட ஆங்கிலப் பேரரசே அண்ணல் காந்தி அடிகளின் உறுதிமிக்க வீர வாசகங்களுக்கு முன்னால் நிலைகுலைந்து போனதை வரலாறு காட்டுவதனைக் &m Gordon'th. (A good tongue is a good weapon) நல்ல நாக்கே சிறந்த படைக்கலன் என்னும் உண்மை, வாழ்வின் பல நிலைகளிலும் விளங்கக் காணலாம்.

ں ---- (مے

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/71&oldid=586966" இலிருந்து மீள்விக்கப்பட்டது