பக்கம்:அறநெறி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 71

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு (குறள்-467)

என்றார் திருவள்ளுவர். ஒரு செயலைத் தொடங்குவ தற்கு முன் அச் செயலின் சாதக பாதகங்களை (Pros and Cons) நன்கு சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்துப் பார்த்துவிட்டுச் செயலாற்றத் தொடங்கிவிட்டால் பின்னர் இடைவழியில் தயங்கி நிற்கக்கூடாது. அவ்வாறு நின்றால் அச்செயல் இடையில் நின்றுவிடும். ஒருவேளை தொடர்ந்து மேற்கொள்ளப் பெற்றாலும் அ ைர மனத்தோடு செய்யும் செயல் முழு வெற்றியைத் தராது. பிறர் பாராட்டும் வெற்றியினதாகவும் அமையாது.

“ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு” என்னும் பழமொழியும் நாட்டு மக்கள் நெஞ்சில் நின்று நிலவுகிறது. சிலருக்கு எதிலும் அவசரம்தான். அவர்கள் நன்கு திட்டமிடாமலேயே களத்தில் இறங்கிவிடுவார்கள். எதிலும் ஒரு திட்டம் வேண்டும். முதற்கண் செயல் திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். திருவள்ளுவர் வினைத்துாய்மை, வினைத்திட்பம் கூறியதோடு மட்டும் நிற்கவில்லை. காலமறிதல், இடமறிதல், வலியறிதல், துணையறிதல் முதலியவற்றையெல்லாம் கு றி ப் பிட்டுள்ளார். இரண்டாம் உலகப் போரில் வெற்றிமேல் வெற்றி பெற்றுக்கொண்ட ஜெர்மனியும் ஜப்பானும் ரஷ்யாமேல் குளிர் காலத்தில் படையெடுத்தபோதுதான் தோல்வியை நோக்கி-அழிவை நோக்கி அடியெடுத்து வைத்தன.

ஒரு செயலை விரைந்து செய்ய வேண்டியது அவசியம்தான். வேகமாகச் செய்யவேண்டும் என்று நினைத்து, விவேகமற்ற அறிவுக்குப் பொருந்தாத வழிகளில் ஈடுபடுதல் கூடாது. அறிவு அற்றம் காக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/73&oldid=586968" இலிருந்து மீள்விக்கப்பட்டது