பக்கம்:அறநெறி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அறநெறி

கருவி’ என்பார் திருவள்ளுவர். சீக்கிர புத்தி-உடனடி யாக முடிவு எடுத்துச் செயல்படுவது தேவைதான். ஆனால் எதிர் விளைவுகளை நோக்காது மேற்கொள்ளும் சிக்கிர புத்தியால் அதன் செயல்களால் ஆக்கமின்றி அழிவே முன்னிற்கும். எனவே சீக்கிர புத்தியே ஒரு செயலின் பலவீனமாக அமைந்துவிடுவதைக் காணலாம்.

“sma loué sub gravoljub 3G3’ (Delay is dangerous) என்று மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை புகல்வார். சிலர் எச்செயலையும் நாளைக்கு நாளைக்கு என்று தள்ளிப் போட்டுக்கொண்டே போவார்கள். எந்த ஒரு நாளிலாவது முடிப்பார்களா என்றால் அது இல்லை என்பது நாள் போகப் போகத் தெரியும். (Delaying tactics) என்று இது சொல்லப்பட்டாலும்கூட ஒரு செயலை முறைப்படச் சூழ்ந்து செய்யாவிடிற் பழுது ஏற்பட்டுவிடும். சீக்கிர புத்தி பலவீனம் ஆவதுபோல, வரையறையற்ற காலந் தள்ளிப்போடுவது என்பதும் பயன் விளைவிக்காத ஒன்றாகிவிடும். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போலச் சிலா செயலாற்ற முற்படுவர். விரைந்து ஒரு முடிவுக்கு வருவது போற்றத்தக்க செயல்தான் என்றாலும் அச்செயலின் முடிவு தோல்வியாக அமைந்துவிட்டால் அது வாழ்க்கையையே பாதித்துவிடும் அன்றோ?

திருவள்ளுவச் சான்றோர்,

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல் (குறள்-668)

என்று அருளியுள்ளதனை நோக்க, ஒரு செயலை எடுத்துக் கொண்டபிறகு, அச் செயலால் எதிர்கொள்ள வரும் இடையூறுகளை இன்னல்களைப் பொருட்படுத்தக்கூடாது. என்பதும், இடைவழியின் ஏதம் அறிந்து தங்கிவிடக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/74&oldid=586970" இலிருந்து மீள்விக்கப்பட்டது