பக்கம்:அறநெறி.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.11n’. 73

கூடாது என்பதும், தூக்கத்தையும் நீக்கி, அல்லும் பகலும் உழைத்து குறிக்கோளை அடையவேண்டும் என்பதும் தெற்றெனப் புலனாகின்றது,

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத் தொன்று உண்டாகச் செய்வான் வினை

(குறள்-758)

என்று திருவள்ளுவர் கூறியிருப்பதனை நோக்கும்பொழுது, யானைப் போரைக் குன்றின் மீதிருந்த பார்ப்பவன் சேத முறாதது போல, பிறரை எதிர்நோக்காது, தன்செயல்கள் வழியே தான் எண்ணிய எண்ணத்தை இனிது முடிப்பவன் ஆபத்தில் சிக்கிக் கொள்ளாமல் வெற்றி என்னும் துறை முகத்தை விரைவில் சென்றடைவான் என்பது பெறப் படுகிறது. எனவே ஒரு செயலைச் செய்து முடிக்கும் நேரத்தினும், (Time) அச்செயலை மேற்கொள்ளும் வழிகளும் இறுதியில் வந்தெய்தும் பிறர் பாராட்டும், வெற்றியுமே முக்கியம் என்பது விளக்கமுறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/75&oldid=586971" இருந்து மீள்விக்கப்பட்டது