பக்கம்:அறநெறி.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ø. 1rr. 75

எனவே உயிர்க் குலத்திற்கு உணவு தருதல் என்பது அன்றும் இன்றும் பேரறமாகக் கொள்ளப்படுகிறது. சுவாமி விவேகானந்தர், அண்ணல் காந்தியடிகள் முதலானவரும் பசியால் துடிக்கும் ஏழை மக்களிடம் கடவுளைப் பற்றிப் பேசக்கூடாது அவர்களுக்குக் கடவுள் கஞ்சியின் வடிவில், ரொட்டியின் வடிவில் தான் வருவார் என்று குறிப்பிட்டு, ஏழைகளின் பசியைத் தணிவித்த பிறகே அவர்களிடம் ஆன்மீகம் பற்றிப் பேச வேண்டும் என்றார்.

இதனைப் பண்டுதொட்டே நம் மக்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

(-குறள் 322)

என்று திருவள்ளுவர் தெளிவுறக் குறிப்பிட்டார்.

இந்த வுலகில் எண்ணற்ற மக்கள்-இனத்தவர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். அவர்கள் பல்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள். அவ்வவ்மொழிகளில் பல்வேறு இலக்கியங்கள் முகிழ்த்துள்ளன; அறிவு சான்ற பெருமக்களின் அறநூல்கள் உருவாகியுள்ளன. அந்நூல் களில் வாழ்க்கைக்குத் தேவைப்படும் அறக்கருத்துகள் பல கூறப்பட்டுள்ளன. அவ்வனைத்துக் கருத்துகளின் முடிமணியான-தலையாய கருத்து என்னவென்று பார்த் தால், அக்கருத்து, பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல், என்பதாக அமைவதைக் காணலாம்.

பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் சங்ககால இலக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட இடம்பெறும் நற்றமிழ்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/77&oldid=586974" இருந்து மீள்விக்கப்பட்டது