பக்கம்:அறநெறி.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அறநெறி

புலவராவர். அவர் வறுமைவாய்ப்பட்டார். அதன் விளைவாக அவருடைய குடும்பமே பசிப்பிணியில் சிக்குண்டது. அவர் மனைவி ஒரளவு கூட உண்ண முடியவில்லை. அதனால் தான் பெற்ற குழந்தைக்கே பால் கொடுக்க முடியாத பரிதாப நிலைமை. புலியைக் கூறி அச்சமூட்டியும் நிலவைக்காட்டிக் குழந்தையினை அமைதிப்படுத்த நினைக்கிறாள். இயலவில்லை. குழந்தை தாய் முகம் நோக்கி அமுகிறது. என் மனைவி என் முகம் நோக்கினாள். நான் நின்முகம் நோக்கினேன் குமணா என்று குமண வள்ளலை நாடிச்சென்று இரந்து வேண்டினார்.

இல்லுணாத் துறத்தலி னின்மறந் துறையும் புல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண் பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன் கூழுஞ் சோறுங் கடைஇ ஊழின் உள்ளில் வறுங்கலக் திறந்தழக் கண்டு மறப்புலி யுரைத்து மதியங் காட்டியும் நொந்தன ளாகி நுங்தையை யுள்ளிப்

அல்லல் உழப்போள்

-புறநானூறு 16:1; 17-23

இவ்வாறு தன் குடும்ப நிலைமையினைக் கூறியிரந் த புலவர் பெருஞ்சித்திரனார்க்குக் குமணவள்ளல் பெரும் பொருளினைப் பரிசாக நல்கினான். அப்பொருளைக்

கொணர்ந்து தன் மனைவியிடம் பெருஞ்சித்திரனார் தந்தார். தன் மனைவியைப் பார்த்துப் பேசலுற்றார்.

பலாப்பழங்கள் நிறைந்து தொங்கிக் கொண்டிருக்கும் முதிரமென்னும் மலைக்குத் தலைவனாகிய திருந்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/78&oldid=586976" இருந்து மீள்விக்கப்பட்டது