பக்கம்:அறநெறி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 அறநெறி

இன்று நம் கண்முன்னால் நடைபெறுகிற வாழ்க்கை முழுதும், நம் முன்னோர்களின் உள்ளங்களில் பிறந்த எண்ணங்களின் விளைவேயன்றி வேறல்ல!

ஒரு புதிய இசை, ஒரு புதிய சிந்தனை, ஒரு புதிய கவிதை, ஒரு புதிய ஓவியம் முதலில் கலைஞனின் சிந்தனை யில் உதித்துப் பின்னரே புற உலகில் அடியெடுத்து வைக்கும்! புதிய ஆண்டும் அவ்வாறே!

நம்முடைய அரசியல் நெறிகள், சமுதாய ஒழுக்கக் கோட்பாடுகள், பொருளாதார அமைப்புகள், நம் ண்ைபாட்டுக் கோலங்கள், நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, அணியும் அணிகலன்கள்-யாவுமே பன்னெடுங்காலமாக முன்னோர் வகுத்துத்தந்து சென்றவையே! ஒவ்வொரு காலத்திலும் அவற்றில் சிற்சில மாறுதல்களை நாம் செய்திருக்கிறோம் அவ்வளவுதான்’

மனித குலத்தின் ஒப்பற்ற பெரியோர்கள் எங்கும் போய்விடவில்லை. கருத்துகளாகவும் நிறுவனங்களாகவும் நடையுடை பாவனைகளாகவும் உயிர்த்தன்மை-நிலைத் தன்மை பெற்று நம்முடனேயே நிலவுகிறார்கள் எனலாம். அவர்களின் நிறைவேறாத கனவுகளையும், முழுமை யடையாத முயற்சிகளையும் அவர்கள் நூல்கள் வாயிலாக உயில் சாசனமாக விட்டுச் சென்றுள்ளமையை அறிந்து செயல்படுவோம். வாழக்கைப் பயணத்தின் மேடுபள்ளங் களையும் வெற்றி தோல்விகளையும் நன்குணர்ந்த அவர் களுடைய அனுபவங்கள் நமக்கும் ஒரு படிப்பினையாக அமைய முடியும்.

1. துறைவன், வாழ்வியல் சிந்தனைகள், ப. 92.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/8&oldid=1475284" இலிருந்து மீள்விக்கப்பட்டது