பக்கம்:அறநெறி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.3m. 7g

காரணமாக எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் அவனுக்கு வரவேற்பு இருக்கும் என்கிறார் வள்ளுவர்.

தொல்காப்பியம்’ என்னும் அரிய இலக்கண நூலினைத் தந்த காலத்தால் முற்பட்ட தொல்காப் பியனார் பொருளதிகாரத்தில் முதற் பொருள் என்று நிலங்களையும் (Earth) பொழுதுகளையும் (Time) குறிப் பிட்டார். தொல்காப்பியனார் குறிப்பிடும் இந் நிலங்களும் பொழுதுகளும் முதல் பொருள்களாக மட்டுமல்லாமல் மனிதன் வாழ்வாங்கு வாழ முதல்’ (Capital) கொடுக்கும் ஊற்றுகளாகவும் திகழ்வதனைக் காணலாம்.

நீலங்களும் பொழுதுகளும் இல்லையெனில் உலக வாழ்வு என்றே ஒன்று இருக்காதன்றோ! பழந்தமிழர் தாம் வாழ்ந்த திருவிடத்தினை'நானிலம் என வகுத்தனர். மலையும் மலையைச் சார்ந்த இடம் குறிஞ்சி என்றும், காடும் காட்டைச் சார்ந்த இடம் ‘முல்லை” என்றும், வயலும் வயலைச் சார்ந்த இடம் மருதம்’ என்றும், கடலும் கடலைச் சார்ந்த இடம் நெய்தல்’ என்றும் விதந்தோதப்பட்டன. வளங்குறைந்த (வாழ்க்கைக்கு அவ்வளவாகத் துணை நிற்காத) நிலம் ‘பாலை எனப் பட்டது. இந்நிலங்களில் எழுந்த மரஞ்செடி கொடி களிடத்திலும்கூட நம்பழந்தமிழ் மக்கள் பற்றுச் செலுத்தினர். புன்னைமரமொன்று தன் தாயால் தான் பிறப்பதற்குமுன் ஆர்வத்துடன் வளர்க்கப்பட்டதாலின், அப் புன்னை மரத்தைத் தன் தமக்கையாக, அக்காவாக எண்ணித் தன் காதலனிடம் பேசவே நாணி வெட்கப் பட்ட தலைவி ஒருத்தியை நற்றிணைப் பாடலொன்றில் கண்டு தெளியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/81&oldid=586981" இலிருந்து மீள்விக்கப்பட்டது