பக்கம்:அறநெறி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி.பா. 81

சங்கப் புலவர்களுள் விரல்விட்டு எண்ணத் தக்க பெரும் புலவர்களுள் ஒருவரான நக்கீரரின் இந்தப் பாட்டு உலக ஒருமைப்பாட்டுக்கு வழிகோலும் என்பதில் ஐயமில்லை.

மகாகவி பாரதியாரும், காக்கையும் குருவியும் தம் சாதி என்றும், கடலும் மலையும் தம்முடைய உறவினர் களென்றும், எந்தப் பக்கம் நோக்கினாலும் நம்மவர்களே யன்றி மற்றவர்களான விரோதிகள் எவரும் இல்லை யென்றும் களிபொங்கக் கவிதை பாடுகின்றார்.

காக்கை குருவி எங்கள் சாதி-நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் நோக்குங் திசையெலாம் காமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம்

-பாரதியார் கவிதைகள்

சங்க காலத்தில்.

பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை காத்தழும் பிருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுங்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரி

-புறநானுாறு : 200 : 9-12

என்று பாரி முல்லைக்குத் தேரீந்த காரணத்தாலே போற்றப் பெறுகிறான். பேகன், காட்டில் குளிரால் வாடிய மயிலுக்குத் தான் அணிந்திருந்த விலையுயர்ந்த போர்வை யினையே நல்கினான் எனப் புறப்பாடலொன்று புகலுகின்றது.

மடத்தகை மாமயில் பனிக்கும்என்று அருளிப் படாஅம் ஈத்த கெடாஅ கல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக

-புறநானூறு: 146:1-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/83&oldid=586985" இலிருந்து மீள்விக்கப்பட்டது