பக்கம்:அறநெறி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அறநெறி

நம்முடைய நாட்டில் அஃறினை உயிர்களைக்கூடத் தம்மோடு ஒத்த மதிப்புடைய உறவினர்களாகக் கருதி வாழ்ந்த செய்தி விளக்கமுறுகின்றது. இத்தகைய செயல்கள்தாம் தமிழரைப் பண்பாட்டு நோக்கில் உலகில் தலைநிமிரச் செய்தவைகளாகும்.

‘மனித நாகரிகம் வளர்ந்த தொட்டில்” (The Cradle of human Civilization) or oró, on-split u(9th Qaveyaslurr grgoth கடல்கொண்ட பகுதியில் அந்நாளில் முகிழ்த்திருந்த நாகரிகம் நம்தமிழ் நாட்டை உள்ளிட்டது என்பதனை அனைவரும் அறிவர். எனவே அன்றுதொட்டு இன்றுவரை தமிழ் மக்கள் ‘உலகம் ஒரு குடும்பம்’ என்ற உணர்வோடு வாழ்ந்துவருதல் கண்கூடாகும்.

3. திருமூலர் நெறி

எண்ணற்ற தவஞானியர் இந்த மண்ணில் பிறந்திருக் கிறார்கள். அவர்கள் மனிதகுலம் வாழ, வளமான செறிவான கருத்துகளை வழங்கிச் சென்றுள்ளனர். அத்தகையோருள் காலத்தால் முற்பட்டுத் திகழும் தவஞானியருள் தலையாயவராய்த் திகழ்பவர் திருமூலர் ஆவர். திருமூலர் இயற்றிய திருமந்திரம், திருக்குறள் போல வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிறந்த நூலாகும். திருமூலர் கூறும் கருத்துகள் பல, மன்பதை உய்ய, உயர வழிகாட்டும் சீர்மை சான்றனவாகும். =

“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்ற கருத்து, சாதி ஒன்றே இறைவனும் ஒருவனே என்ற கருத்தை உணர்த்தி நிற்கிறது. இதுபோன்றே ஏழைகளுக்கு இரங்கி உதவுவதே தலையாய அறம் என்பதனை வலியுறுத்தி நிற்கின்றது. மேலும் நடமாடும் கோயில்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/84&oldid=586986" இலிருந்து மீள்விக்கப்பட்டது