பக்கம்:அறநெறி.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 83

என்று ஏழை எளிய மக்களைக் குறிப்பிடுகின்றார். “படமாடுங்கோயில் என்று இறைவனைக் குறிப்பிட்டு, ஒர் அரிய கருத்தொன்றனைத் தம் பாடலில் புலப்படுத்து கின்றார்.

நடமாடக் கோயில் கம்பர்க்கு ஒன்றியில் பட மாடக் கோயில் பகவற்க தாமே -திருமந்திரம்

மேலும் உயிரையும், உடலையும் ஒம்ப வேண்டுவதன் இன்றியமையாமையினையும் நன்கு வலியுறுத்துகின்றார். நம் உடம்பினை இறைவன் வாழும் ஆலயமாக எண்ணி உடலோம்புதல் வேண்டும் என்பதனையும் குறிப்பிடு கின்றார்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

இவ்வாறு உடலை ஒம்பி வாழவேண்டுவதன் அவசியத்தினைக் குறிப்பிடும் திருமூலர், உடம்பு எத்தகைய தன்மையுடையது என்பதனை மனத்தில் ஆழப் பதியுமாறு ஒரு பாடல் புனைந்துள்ளார். தன் மனைவி அருமைப்பாட்டுடன் சமைத்த உணவினை உண்ட ஒருவன், உண்டபின் தன் மனைவியுடன் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கும்காலையில், தன் உடம்பில் இடப் பாகத்தில் அமைந்திருக்கும் இதயம் வலிக்கிறது எனக் கூறிய அளவிலேயே உயிரி நீங்கிய செய்தியினை அவலந் தோன்றக் குறிப்பிடுவார்.

அடப்பண்ணிவைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார் இடப்பக்கமே இறைகொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடங்தொழிக் தாரே

-திருமந்திரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/85&oldid=586988" இருந்து மீள்விக்கப்பட்டது