பக்கம்:அறநெறி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அறநெறி யாக்கை நிலையாமையினை வற்புறுத்தும் திருமூலர் யாக்கையை ஒம்ப வேண்டுவதன் அவசியத்தினையும் குறிப்பிட்டிருப்பதை மேலே கண்டோம். கிடைத்தற்கரிய அரிய பிறவி மனிதப் பிறவியாகும். அந்தப் பிறவி பெற்ற ஒருவர் எவ்வாறு வாழ்க்கையில் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு விளக்கமாகத் திருமூலர் செப்பிடும் கருத்துகளைச் சற்று ஆழச் சிந்திக்க வேண்டும். தமிழ்ப் பண்பாட்டின் அடிக்கூறாக விளங்குவது இறைக் கொள்கையாகும். இறைவன் ஒருவன் உளன்; அவன் நம்மையெல்லாம் இயக்குகின்றான் என்பதுதான் தமிழர் தத்துவம். "தெய்வம் உண்மையென்று தானறிதல் வேண்டும்" என்பது பாரதியின் வாக்கு. எனவே தெய்வத்தை வணங்கி வழிபாடாற்றுவது என்பது உயிர்க்குலத்தின் உயர் கடமையாகும். இறைவனை வணங்க மலரிட்டு, உளம் உருகி நின்று வழிபாடாற்றுவது மரபு. மலர் கிடைக்கவில்லையெனில் உள ஒருமைப் பாட்டுடன் பத்திரம் பறித்து இறைவன் மலரடிகளில் அதனைத் துவி நிற்கவேண்டும். அடுத்து வாயில்லாப் பிராணிகள் என்று குறிப்பிடும் உயிர்க் குழாத்துள் பசு தலைமையிடம் வகிக்கின்றது. பசு உ ண வி ன் றி த் துடிதுடித்து நிற்கும்போது எவரும் வாளாயிருந்துவிடக் கூடாது. புல் தேடிப் போட்டுப் பசு உண்ணுமாறு செய்யவேண்டும். பசுவிற்குப் பல்லாற்றானும் துணை நிற்க வேண்டியது மாந்தனுக்கு வகுக்கப்பட்ட ஒர் உயரிய கடமையாகும். மூன்றாவதாக, மனிதனுக்கு மனிதன் தன்னாலியன்ற உதவியினைச் செய்யவேண்டும். அறங்களில் தலையாய அறம் ஒருவர் பசியினை-வயிற்றுப் பசியினைப் போக்குவதேயாகும். எனவே உண்ணுவதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/86&oldid=739205" இலிருந்து மீள்விக்கப்பட்டது