பக்கம்:அறநெறி.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அறநெறி

‘காக்கைகரவாகரந்துண்ணும் ஆக்கம்’ எனச்சொல்லப்படுவதும் இதுதான்.

எனவே திருமூலர் உணர்த்தியுள்ள வாழ்க்கை நெறிகள் பலவாகும். அப்பலவற்றுள் உடம்பு நிலையாமையும் ஒன்று. எந்நேரத்திலும் அழியக்கூடிய உடம்பினை இறைவன் எழுந்தருளியிருக்கும் இல்லமாக நினைத்து உடம்பினை நாள்தோறும் நன்கு பாதுகாக்க வேண்டும் என்பதும் இறைவனைப் பச்சிலையிட்டு வணங்கவேண்டும் என்பதும் பசுவிற்குப் புல் இட்டுப் போற்றவேண்டும் என்பதும் உண்ணப் புகுமுன் உண்ண வசதியில்லாதவர்க்கு உண்ண ஒரு பிடிசி சோறு தந்து அவர்களை வாழ்விக்கவேண்டும் என்பதும், மேற்காணும் எந்த உதவியும் வழங்க வாய்ப்பில்லாமற்போனால் பிறரிடம் இனிய சொற்கள் கொண்டு பேசி மனம் மகிழச் செய்யவேண்டும் என்பதும் பெறப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/88&oldid=586993" இருந்து மீள்விக்கப்பட்டது