பக்கம்:அறநெறி.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. நல்லோர் நவின்ற நன்னெறி

1. உலகம் ஏன் இயங்குகின்றது?

இந்த உலகம் ஏன் இயங்குகின்றது என்று இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மன்னன் மனத்தில் ஐயம் எழுந்தது. இந்தக் கேள்வி அவனுடைய மனத்தை ஓயாமல் சிந்தனைக்கு உள்ளாக்கியது. அதன் விளைவாக அவனுடைய மனத்தில் ஒரு விடையும் கிடைத்தது. இவ் உலகம் இடையறாது இயங்கிக்கொண்டிருப்பதற்குக் காரணம் தனக்கு என வாழாமல் பிறருக்கு என வாழும் பெருமனம் கொண்டவர்கள் வாழ்ந்து கொண்டு இருப்பத னால்தான் இப்பொழுதும் உலகம் உயந்து கொண்டிருக் கிறது என்று அதற்கு அவன் விடை கண்டான். அரிய பொருளே தனக்குக் கிடைப்பதாக இருந்தாலும் தான் மட்டும் இவ் அமிர்தத்தை உண்டு பன்னெடுங்காலம் வாழலாம் என்று தன்னல நோக்கில் முடிவுகட்டாமல், பிறரும் அந்தத் தேவாமிர்தத்தைப் பருகி, அவர்களும் பல்லாண்டுகள் வாழவேண்டும் என்ற பெருநோக்கத்தோடு அந்தத் தேவாமிர்தத்தைப் பிறருக்கும் கொடுத்து வாழ்கிற வர்கள்- நல்ல பெருநோக்கு எண்ணம் உடையவர்கள் இவ் உலகத்தில் வாழ்கிறார்கள் என்று கண்டான். அத்தகைய வர்கள் கோபமோ, வெறுப்போ பிறர் மாட்டுக் கொள்ளாமல் சோர்வு என்கிற ஒன்றினைத் தூரத் துரத்தியவர்கள் ஆவார்கள். சோம்பலுக்கு இரையாகாமல், அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சி, அறவோர் அஞ்ச வேண்டும் என்று கருதியவைகளுக்கு மட்டும் அஞ்சி, புகழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/89&oldid=586994" இருந்து மீள்விக்கப்பட்டது