பக்கம்:அறநெறி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gł. rørf. 89

தமிழ் உலகிற்குப் பெரும் பயன் நல்கும் என்று எண்ணி, அந்த நெல்லிக் கணியினை ஒளவைக்கு “ஈந்தான் என்று

எனவே, தனக்கு என வாழாமல் பிறருக்கு என வாழும் பெருமனம் உடையவர்களைக் கொண்டு சமுதாயம் விளங்குமேயானால், அதனால் விளையும் நன்மைகள் பல சங்க காலத்தில் வாழ்ந்த பெருஞ்சித்திரனார் எனும் செந் தமிழ்ப்புலவர், தம் வறுமை தீர வள்ளல் குமணனை நாடிசி சென்றார். வரையாது வழங்கும் அவ் வள்ளலும், பெரும் பொருளை நல்கினார். அப் பொருளைப் பெற்றுவிட்டுதி திரும்பிய புலவர் தன் காதல் மனையாளை அழைத்து “நீ விரும்புகின்றவர்களுக்கும் உன்னை விரும்புகின்றவர் களுக்கும். கற்பிற் சிறந்துள்ள உறவினர்களுக்கும் வறுமை வரப்பட்ட பொழுது நம்க்கு உதவியவர்களுக்கும், மற்ற எவருக்கும்-இவ்வளவுதான் பொருள் வழங்க வேண்டும் என்றுவரையறை செய்யாமல், என்னுடைய இசைவினையும் கேட்டுக்கோண்டு இருக்காமல், முதிர மலைக்குத் தலைவ னாகிய குமணவள்ளல் வாரி வழங்கிய செல்வத்தை, நாளைக்கு நமக்கு எனச் சேமித்து வைக்காமல், இன்னவருக்கு என்று இல்லாமல் எல்லோருக்கும் கொடுப்பா யாக” என்று கட்டளையிட்டான்.

“கின்நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைார்க்கும்

பன் மாண் கற்பின் நின்கிளைமுத லோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாழகின் நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும் இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழவோயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/91&oldid=586998" இலிருந்து மீள்விக்கப்பட்டது