பக்கம்:அறநெறி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 அறநெறி

பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே; செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே தப்பு பலவே’

-புறநானூறு : 189

மேலும், வாழ்க்கையில் பிறருக்கு நல்லது செய்வது என்பதையே குறிக்கோளாகக் கருதவேண்டும். அவ்வாறு நல்லது செய்யமுடியாத சூழல் ஏற்பட்டால், பிறருக்குத் தீமையாவது செய்யாமல் இருக்கவேண்டும். அவ்வாறு நன்மை செய்பவர்களை உலகம் பாராட்டுவதும், தீமை செய்பவர்களைப் பழித்து ஒதுக்குவதும் இயல்பாக நிகழ் கின்ற சூழல்களாகும். எனவே, நல்லது செய்யமுடியாமல் போனால் பிறருக்குக் கெடுதலாவது செய்யாது ஒருவர் இருப்பது சிறப்பாகும். அதனையே, அறிவு உலகம்-அன்பு உலகம் விரும்புகின்றது; அதுவே நல்ல நெறி என்றும் கொள்கின்றது; எனவே, அந்த நிலையில் நின்றுவாழ்கின்ற ஒருவரே இந்த உலகில் புகழ் உரைகளும், பாராட்டு மொழிகளும் உடையவர்களாக அமைவர்.

“நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

அல்லது செய்தல் ஒம்புமின்! அதுதான் எல்லாரும் உவப்பது அன்றியும் கல்லாற்றுப் படூஉ நெறியும் ஆர் அதுவே”

-புறநானூறு 195 : 6-9.

மறந்தும் பிறன்கேடு சூழாதவர்களே மண்ணுலகில் வாழ்ந்து விண்ணுலகைக் காண்பர் என்று சங்கச் சான்றோர்கள் சாற்றினர். எனவே, பிறருக்குத் தீமை செய்யாமல் வாழும் வாழ்க்கையே, பிறருக்கு உதவும் வாழ்க்கையே வாழ்க்கையாகும். அதனைவிடப் பிறருக்கு மனத்தாலும் தீமை நினையாமல் வாழும் வாழ்க்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/94&oldid=587002" இலிருந்து மீள்விக்கப்பட்டது