பக்கம்:அறநெறி.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&.arr. 95.

‘பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்

விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப் புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் உண்ணென்று ஒக்குபு புடைப்பத் தெண்ணிர் முத்தரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று அளிகரைக் கூந்தற் செம்முது செவிலியர் பரிமெலிந்து ஒழியப் பந்தர் ஓடி ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ங் தனள்கொல்? கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள் ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுது மறுத்து உண்ணுஞ் சிறுமது கையளே” (நற்:110) இவ்வாறாக, பிறந்த வீட்டின் பெருமையை எண்ணாமல் புகுந்த வீட்டின் சூழலுக்கு ஏற்பத் தன்னை ஆட்படுத்திக்கொண்டு, அதற்கு ஏற்ப வாழுகின்ற பெண்ணின் பெருந்தக்களாகிய ஒருத்தியின் இருவேறு வாழ்க்கை நிலைகளைப் போதனார் எனும் புலவர் நற்றிணைப் பாடல் ஒன்றில் நயமுற விளக்கியுள்ளார். இந்த வாழ்வுநிலை பெண்களால் எண்ணிப் பின்பற்றப் பட்டால் வளமையிலும் ளத்திலும் வாழ்வில் இயைந்து வாழும் மனப்பக்குவமும் கொண்டு வாழலாம். அம் மனநிலையே அரியதொரு வாழ்விற்கு உரிய ஒரு பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

‘இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை’ ‘மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித்தாயினும் இல்’ என்ற திருக்குறள்களையும்ம் ஈண்டு நீள நினைந்து நோக்கத்தக்கனவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/97&oldid=587006" இருந்து மீள்விக்கப்பட்டது