பக்கம்:அறநெறி.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 அறநெறி

4. வாழும் முறைமை

‘பாட்டுக்கொரு புலவன்’ என்று நாட்டு மக்களால் நலமுறப் பேசப்பெறும் மகாகவி பாரதி தன் பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தைப் பாலித்திடவேண்டும் என்று சொன்னார். இந்த உலகில் வாழும் முறைமையினைத் தான் இயற்றிய பாப்பாப் பாட்டில் எடுத்துமொழிந்தார் நெடிய பாட்டாய் இருக்கின்ற அந்தப் பாட்டில் அமைந் துள்ள ஒரு பாட்டு, வாழும் நெறியினை-அறநெறியினை இனிமையுற எடுத்து மொழிவதாக அமைந்துள்ளது.

“உயிர்க ளிடத்திலன்பு வேணும்-தெய்வம்

உண்மையென்று தானறிதல் வேணும் வயிர முடையநெஞ்சு வேணும்-இது வாழு முறைமையடி பாப்பா’ என்று குறிப்பிட்டார். இந்தப் பாட்டைச் சற்று ஆழ நினைந்துப் பார்ப்போம்.

முதலாவதாக, பாரதி குறிப்பிடுவது உயிர்களிடத்தில் அன்பு வேணு க்’ என்பதாகும். இந்த உலகே ஒரு குடும்பம் என்று வாழ்வது தமிழ்ப் பண்பாடு. ஈராயிரம் ஆண்டு களாக இடையறாது உயிர்த்துவரும் தமிழ்ப் பண்பாட்டின் தலைஊற்றாக உலக உயிர்கள் அனைத்தையும் ஒன்றாக நேசிக்கும் உயிர் பண்பினைக் குறிப்பிடலாம். புன்னை மரத்தை, தன் உடன்பிறந்த சகோதரியாக எண்ணிய ஒரு பெண்ணின் மனம் சங்கப்பாடல் ஒன்றில் சாற்றப் படுகின்றது.

‘காக்கை, குருவி யெங்கள் ஜாதி-ள்ே

கடலு மலையு மெங்கள் கூட்டம்

நோக்குங் திசையெலாம் காமன்றி வேறில்லை;

நோக்க, கோக் கக்களி யாட்டம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/98&oldid=587008" இருந்து மீள்விக்கப்பட்டது