பக்கம்:அறப்போர்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறப்பது எப்படி ?


வற்றாலும் பயனை அடைகிறார்கள். ஆனாலும் அவற்றின் தரத்தை அவர்கள் உணர்ந்தே பயன் கொள்கிறார்கள். விளக்கை ஏற்றும் போது அது கதிரவனேவிடச் சிறந்த தென்ருே, கதிரவனுக்குச் சமானமான தென்றோ நினைப்பதில்லை.

வளவன்: : ஆனால் கதிரவன் இல்லாதபோது தானே விளக்கை ஏற்றுகிறார்கள் ?

புலவர்: கதிரவன் உள்ளபோதும் விளையாட்டுக்காகவும் மங்கல காரியங்களுக்காகவும் விளக்கை ஏற்றுவது உண்டு. அதனால் அவர்களுக்குக் கதிரவனிடத்தில் உள்ள மதிப்புப் போய்விட்டதென்றோ, கதிரவனை அவர்கள் மறந்து விட்டார்களென்றோ சொல்லலாமா?

வளவன்: தாங்கள் உலகம் போற்றும் பெரும் புலவர். தங்களோடு எதிர் நின்று வாதிட நான் யார் ? தங்களைக் காணாமல் என் உள்ளம் மிகமிக வருந்தியது. தாங்கள் வேற்று நாட்டுக்குச் சென்று அங்கே பெற்ற உபசாரத்தால் என்னே மறந்து விட்டீர்களோ, என்று நினைத்தேன். தாங்கள் என்னை மறந்தாலும் நான் தங்களை மறப்பதில்லை.

புலவர்: மறப்பதா! மன்னர்பிரானுடைய உயர்ந்த ஆற்றலையும் புலவரைப் போற்றும் திறத்தையும் தமிழுலகம் முழுதும் அறிந்து,

83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/101&oldid=1267471" இருந்து மீள்விக்கப்பட்டது