பக்கம்:அறப்போர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறப்பது எப்படி ?


தேன். பரிசிலர்கள் புரவலர்களின் தகுதியை எப்படி அறிந்து வைத்திருக்கிருரர்கள் என்பதை அறிந்து கொண்டேன்.

வளவன்: தாங்கள் சொல்வதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளும் ஆற்றல் எனக்கு இல்லை; சற்றே தெளிவுபடுத்த வேண்டும்.

புலவர்: நான் வெளிநாடுகளுக்குப் போன பொழுது மன்னர்பிரான் மறந்து விட்டதாக ஒரு கருத்துத் திருவுள்ளத்தில் இருப்பதாகத் தெரிகிறது. அப்படி இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த நாட்டிலிருந்து பிற நாட்டுக்குச் சென்று அங்குள்ள புரவலர்களைப் பார்க்கிறவர்கள், மன்னர் பிரான் நினைப்பது ஆச்சரியம் அன்று. அந்த காட்டிலுள்ள பரிசிலர்களும் இந்த காட்டையும் இந்த நாட்டு மன்னரையும் கினைத்துக் கொண்டிருக்கிருரர்கள்.

மன்னனுக்கு இன்னும் தெளிவு பிறக்கவில்லை. அதைப் புலவர் உணர்ந்து கொண்டார். விரிவாகச் சொல்ல ஆரம்பித்தார்.

*

மன்னர் ஏறே ! இந்த நாட்டுக்குரிய படை மிகச் சிறந்தது. விரிவான படையும் அதற்கு ஏற்ற விறலுடைய மன்னரும் இந்தச் சோழ காட்டுக்குக் கிடைத்திருக்கிறதை யார் அறிய -

85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/103&oldid=1267472" இலிருந்து மீள்விக்கப்பட்டது