பக்கம்:அறப்போர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


மாட்டார்கள்? படைகளுக்கு முன்னாலே யானேகள் வரிசையாகச் செல்வதைப் பார்த்தாலே பகைவனுக்கு நடுக்கம் கண்டுவிடுமே. யானைகளின்மேல் இருக்கும் பல நிறங்களை உடைய கொடிகள் ஓங்கி உயர்ந்து அசையும். மலை போன்ற யானையின்மேல் அவை அசைவது வானத்தை மாசு மறுவின்றித் துடைக்கும் வேலையை அவை மேற்கொண்டிருக்கின்றனவோ என்று எண்ணத் தோன்றும்.

இத்தகைய படைப் பலத்தைக் கொண்டு என்ன காரியந்தான் செய்யக்கூடாது? மன்னர்பிரானுடைய கோபம் எங்கே பாய்கிறதோ அவ்விடம் அடியோடு அழிந்து போய்விடும்; எல்லாம் பற்றி எரிந்து பாழாகிவிடும். அப்படியின்றி விருப்பத்துடன் பார்க்கும் பார்வை எங்கே படுகிறதோ அந்த இடம் பொன் விளையும் பூமியாக மாறும். தீப்பார்வை எரியைக் கொளுத்த, நயந்த பார்வை பொன் பூப்பச் செய்யும் விறலும் கருணேயும் உடைய மன்னர்பிரான் பெருமையைத் தமிழுலகம் முழுதும் உணர்ந்திருக்கிறது.

நல்ல வெயில் வீசும்போது அந்த வெயிலே மாற்றி நிலாவாக்க வேண்டும் என்று விரும்பினாலும், வெண் திங்கள் நிலாவை வீசும்போது வெயில் வேண்டுமென்று நினைத்தாலும் வேண்-



86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/104&oldid=1267473" இலிருந்து மீள்விக்கப்பட்டது