பக்கம்:அறப்போர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


நீ, நயந்துநோக்கும்வாய் பொன்பூப்பச்
செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும்
வெண்திங்களுள் வெயில்வேண்டினும்
வேண்டியது விளக்கும் ஆற்றல்; ஆகலின்
நின்நிழல் பிறந்து நின்நிழல் வளர்ந்த
எம்.அளவு எவனோ மற்றே; இன்னிலைப்
பொலம்பூங் காவின் நன்னுட் டோரும்
செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
கடவது அன்மையின் கையறவு உடைத்து என,
ஆண்டுச்செய் நுகர்ச்சி ஈண்டுங் கூடலின்
நின்நாடு உள்ளுவர் பரிசிலர்,
ஒன்னார் தேனத்தும் நின்உடைத்து எனவே.

மலேயைப்போன்ற இளைய ஆண் யானைகளின் மேல் வானத்தை மாசு மறுவறத் துடைக்கும் வேலையை உடையவைபோல, பல நிறங்கள் விரவிய கொடிகள் அசையும் பரந்த படையையும் வெற்றியிடுக்கையும் உடைய வேந்தனே! நீ கோபித்துப் பார்க்கும் இடம் தீ பரவ, நீ விரும்பிப் பார்க்கும் இடம் பொன் விளங்க, சிவந்த சூரியனிடத்திலே நிலவு வேண்டுமென்று விரும்பினாலும், வெள்ளிய திங்களிடத்தில் வெயில் உண்டாக வேண்டுமென்று. விரும்பினாலும் நீ வேண்டிய பொருளே வேண்டியபடி உண்டாக்கும் வலிமையை உடையாய்; ஆதலின் கினது குடைகிழற் பட்ட இடத்திலே பிறந்து அந்த நிழலிலே வளரும் எம்முடைய கினேவின் அளவு (கிடக்கட்டும்; அதைத் தனியே எடுத்துச் சொல்லவேண்டுமா) என்ன? இனிய நிலையையும் பொற்பூவையுடைய கற்பகச் சோலையையும் உடைய நல்ல காடாகிய சொர்க்கபூமியில் உள்ளவர்களும் தாம் பெறும் இன்பத்தை தாம் செய்த நல்வினை-

90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/108&oldid=1267478" இலிருந்து மீள்விக்கப்பட்டது