பக்கம்:அறப்போர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறப்பது எப்படி ?


யின் சார்பினாலே பெறுவதல்லது, செல்வம் உடையவர் ஈதலும் செல்வம் இல்லாதவர் இரத்தலுமாகியவை செய்யக் கடவதாகிய இடம் அது அன்று ; ஆதலின் அது செயலிழந்து நிற்கும் வருத்தத்தை உடையதென்று எண்ணி, அங்கே நுகரும் இன்ப நுகர்ச்சி இங்கும் கிடைப்பதனால் நின்னுடைய சோழநாட்டை நினைப்பார்கள் பரிசில் பெறும் புலவர்கள், பகைவர் தேசத்தில் இருந்தாலும், இந்த நாடு உன்னை உடையதாக இருக்கின்றது என்ற கருத்தினால்.

‘வேந்தே, கூடலின், பரிசிலர் நின்னுடைத்தென நின்னாடு உள்ளுவர்; எம் அளவு எவனோ’ என்று கூட்டிப் பொருள்கொள்ள வேண்டும்.

வரை-மலை. புரையும்-ஒக்கும். மழ-இளமை, வகையவகுத்த வேலை. விரவு உரு-கலந்த நிறம். நுடங்கும். அசையும். வியல் தானை-விரிவான படை. வியல்-வெற்றி மிடுக்கு. உடன்று-சினங்து. வாய் இடம். நயந்து-விரும்பி. எவனோ-என்னவோ. மற்று, ஏ: அசை நிலைகள். இன் நிலை-இனிய நிலை. பொன் என்பது மாற்றச் சொற்களோடு சேரும்போது பொலன் என்று செய்யுளில் ஆகும். காசோலை. மருங்கின்-சார்பினால் அல்லதை: ஐ, சாரியை. கடவது-முடியும் தன்மையை உடையது. அன்மையின் அல்லாமையால். கையறவு-செயலற்று நிற்கும் நிலை. நுகர்ச்சி. இன்ப அநுபவம். கூடலின் - கிடைப்பதனால். உள்ளுவர். நினைப்பார். பரிசிலர் . பரிசில் பெறுவோர்; இங்கே புலவர். ஒன்னார் - பகைவர். தேஎம்-தேசம், நின்உடைத்து-நின்னே உடையது. நின்னுடைத்து என்றாலும் சோழ நாட்டில் நீ இருந்து: சிறப்புச் செய்கிறாயென்ற பொருளிலே சொன்னதாகக் கொள்ளவேண்டும்.

விஞர் பாடிய பாட்டை யாவரும் கேட்டு மகிழ்ந்தனர். இது அரசனைப் பாராட்டும்

91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/109&oldid=1391131" இலிருந்து மீள்விக்கப்பட்டது