பக்கம்:அறப்போர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முகவுரை


புலப்படுத்தும் செயல்கள். அவர்களுடைய வீரச் சிறப்பைப் புலவர்களும் பாணரும் விறலியரும் பாடிப் பரிசில் பெற்றார்கள்.

அரசர்களின் கல்வியல்புகளும் வளவாழ்வும் பல வகையாகப் புலவர்களால் சொல்லப் பெறுகின்றன. கல்வி கேள்விகளால் கிரம்பிய அறிவும், யாரிடத்தும் அன்பும், குற்றம் செய்தாரையும் பொறுக்கும் கண்னேட்டமும் மிகுதியாகப் பெற்ற அரசர்கள் தம் நாட்டில் என்றும் அமைதி நிலவும்படி பாதுகாத்தார்கள். அந்த ஏமக்காப்பில் குடிமக்கள் பகை, பசி, நோய் என்பவற்றை அறியாமல் வாழ்ந்தார்கள். பிறருடைய கொடுமையால் அவர்கள் துன் புறுவதில்லலை. பிறரையும் அவர்கள் துன்புறுத்துவதில்லை. அரசனுடைய வீரமும் படையும் பகைவரே இல்லாமம் செய்துவிட்டமையால் போரின்றி வாழும் இன்ப அமைதி அந்த காட்டில் இருந்தது. கொலை செய்யும் வில்லையும் வேறு படைகளையும் அந்த நாட்டு மக்கள் அறியாமல் வாழ்ந்தார்கள். அரசனுடைய செங்கோலாட்சியில் அறம் கவலையின்றி வாழ்ந்தது. தீய நிமித்தங்கள் தோன்றினாலும் அவற்றை நோக்கி அஞ்சாமல் மக்கள் வாழ்ந்தனர். இத்தகைய இன்ப வாழ்வைச் சொர்க்க போகத்தினும் சிறந்ததாக எண்ணிப் புலவர் பாராட்டினர். வேறு நாட்டில் இருப்பவர்களும் இந்த நாட்டு வாழ்க்கையை நினைந்து போற்றினர். பாடல் சான்ற வேந்தனாகிய அவனுடைய நல்லியல்புக்ளைக் கண்ட குடிமக்கள், 'இவனுக்கு ஏதேனும் இங்கு நேர்ந்தால் என் செய்வது!’ என்று அஞ்சி யாதொரு இங்கும் நேராமல் இருக்கவேண்டுமென்று வாழ்த்தி வந்தார்கள்.

அரசன் வளமுடைய நாடும், அம்பு முதலிய படைகளே உடைய அரணும், மலை போன்ற யானையையும், தேர்களையும், பரந்த சேனையையும், வேற்படையையும் உடையவனாக இருந்தான். அவனேப் புலவர்கள் பாடினர்கள். அரசர்கள் களிற்றின்மேலே கொடியை ஏற்றி உலாவாச்செய்தார்கள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/11&oldid=1267384" இலிருந்து மீள்விக்கப்பட்டது