பக்கம்:அறப்போர்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கோட்டிடை வைத்த கவளம்

சேரநாட்டில் முடியுடையரசன் ஆண்டு கொண்டிருந்தாலும் அந்நாட்டின் ஒரு பகுதியைத் தன்னதாக்கி ஆண்டுவந்த அதியமான் நெடுமான் அஞ்சியின் புகழே மிகுதியாகப் பரவியிருந்தது. சேர அரசனுக்கு இந்தச் சிற்றரசனிடத்தில் உள்ளூரக் காழ்ப்பு இருந்தது. அதியமான் சேரர் குலத்தில் உதித்தவன். ஆகவே அவன் சேரர்களுக்குரிய பனை மாலையையே அணிந்திருந்தான்.

சேர அரசன் வஞ்சிமா நகரில் இருந்தான். அதிகமான் தகடூரில் இருந்தான். தர்மபுரி என்று இன்று வழங்கும் ஊரே அக்காலத்தில் தகடூர் என்ற பெயரை உடையதாக விளங்கியது. தர்மபுரிக்கு அருகில் அதிகமான் கோட்டை என்ற பெயருள்ள இடம் ஒன்று இன்றும் இருக்கிறது.

தகடூர் பேரரசன் ஒருவனுடைய இராசதானி நகரம் போலவே சிறப்பாக இருக்கும். அதிகமான் தமிழ் நயம் தேர்வதில் சிறந்தவன். எந்தக் காலத்திலும் புலவர்களின் கூட்டத்தின் இடையே இருந்து, அவர்களுடைய புலமையை வியந்தும் பாராட்டியும் மகிழ்பவன். புலவர்-

94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/112&oldid=1267482" இருந்து மீள்விக்கப்பட்டது