கோட்டிடை வைத்த கவளம்
அன்பும் காட்டுகிறானோ அதே ஆர்வத்தையும் அன்பையும் எப்போதும் காட்டுகிறான். இப்படி வேறு யாரும் உலகில் இருப்பதாகத் தெரிய வில்லையே! இவன் தெய்வப் பிறவி' என்று ஔவையார் அதியமானுடைய இயல்பை நினைந்து வியந்தார். அவனிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றார்.
★
பின் ஒரு முறை ஔவையார் தகடூருக்கு வந்தார். அப்பொழுது அதியமான் அரசியல் பற்றிய செயல்களில் ஈடுபட்டிருந்தான். சேரஅரசன் தன்னைக் கருவறுக்க எண்ணியிருக்கிறானென்ற செய்தியை அவன் அறிந்தான். தகடூரை முற்றுகையிடவும் கூடும் என்று ஒற்றர்கள் வந்து சொன்னார்கள். ஆதலின் தன்னுடைய படை வலியையும் மாற்றானுடைய படை வலியையும் தனக்குத் துணைவராக வருவாருடைய படை வலியையும் ஆராய்வது இன்றியமையாததாகி விட்டது. அமைச்சர்களுடன் ஆராய்ந்தான். சேர அரசன் முடியுடைய பேரரசன். அவனுடைய படை மிகப் பெரிய படை. அதியமானோ சிற்றரசன். அவனிடத்தில் சேரமான் படையை எதிர்த்து வெல்லும் அளவுக்குப் படை இல்லை. புதிய கூலிப் படையைச் சேர்க்கலாம் என்றால், பெரும்
99