பக்கம்:அறப்போர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


பொருள் வேண்டுமே! பொழுது விடிந்தால் புலவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு அவர்களுக்குக் கணக்கில்லாமல் பரிசில் வழங்கி வரும் அவனிடம் அதிகப் பொருள் எப்படி இருக்கும்?

இந்த நிலையில் என்ன என்ன செய்ய வேண்டும் என்ற ஆராய்ச்சியில் அதியமானும் அவன் அமைச்சர்களும் ஈடுபட்டிருந்தார்கள். அரண்மனையில் உள்ள அதிகாரிகள் யாவரும் எப்போதும்போல் முகமலர்ச்சியுடன் இருக்கவில்லை. யோசனையில் ஆழ்ந்தவர்களைப் போலவே யாவரும் காணப்பட்டனர்.

ஔவையார் அங்கே இருந்த அமைதியைப் பார்த்தார். ‘நாம் சரியான காலத்தில் வரவில்லை. இப்போது அதியமானைப் பார்ப்பது அரிதுபோலும்!’ என்று எண்ணினார்.

அதியமானுக்கு ஔவையார் வந்திருப்பது தெரிந்தது. உடனே அவரைப் பார்த்து அன்புடன் பேசினான். அந்தப் பேச்சிலே எத்தகைய வேறுபாடும் இல்லை. “இன்னும் சில நாட்கள் இங்கே தங்கிச் செல்லலாம் அல்லவா?” என்று ஔவையாரைக் கேட்டான். “மாட்டேன்” என்று சொல்ல வாய்வருமா? அவர் ஒப்புக் கொண்டார்.

நாள் முழுவதும் புலவர்களுடன் பொழுது போக்க இயலாத நிலையில், ஒவ்வொரு நாளும்

100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/118&oldid=1267489" இலிருந்து மீள்விக்கப்பட்டது