பக்கம்:அறப்போர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோட்டிடை வைத்த கவளம்


மான் பரிசில் நிச்சயம் நமக்குக் கிடைக்கும். அது இன்று கிடைக்கிறதோ, நாளைக் கிடைக்கிறதோ, அதைப் பற்றிக் கவலை இல்லை. அந்தக் காலம் நீட்டித்தாலும் நீட்டிக்காவிட்டாலும் பரிசில் கிடைப்பது மாத்திரம் உறுதி. வேறு ஒருவருடைய கையில் உள்ள பரிசில் அது, நமக்கு எப்படி எப்போது வரும் என்ற எண்ணமே வேண்டாம். நம் கையில் இருப்பதாகவே எண்ணிக் கொள்ளலாம்.

‘யானைக்குத் தழையுணவைக் கொடுக்கிறோம். அது அதை உடனே உண்ணாமல் தன் கொம்பினிடையிலே வைத்துக் கொள்கிறது. “அடடா, இதை இது உண்ண வேண்டுமென் றல்லவா கொடுத்தோம்? - இது இங்கே வைத்துக் கொண்டு விட்டதே” என்று கவலைப்படலாமோ! யானை எப்படியும் அதை உண்டே விடும், யானை தன் கோட்டிடையே வைத்த கவளத்தைப் போன்றது, அதியமான் நமக்குத் தரப்போகும். பரிசில்; அது நம் கையிலே இருப்பது போன்றது தான். அது கிடைக்காமற் போகாது. இதை அநுபவத்தில் நாம் நன்றாக உணர்ந்திருக்கிறோமே. அப்படி யிருந்தும் நீ ஐயுறலாமோ!

‘இத்தகைய சிறந்த ஈகையையுடைய அதியமானை நாம் வாழ்த்தவேண்டும். பரிசில்

103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/121&oldid=1267493" இலிருந்து மீள்விக்கப்பட்டது