பக்கம்:அறப்போர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோட்டிடை வைத்த கவளம்


இருப்பதுதான்; அது நமக்குக் கிடைப்பது தவறாது, அவன் தரும் பரிசிலை நுகர ஏமாந்து நிற்கும். நெஞ்சமே, பரிசில் கிடைக்குமோ கிடைக்காதோ என்று நீ வருந்தவேண்டாம்; அவன் முயற்சி வாழட்டும்.

செல்லலம்-போகோம். பயின்று- அடுத்தடுத்துப் பழகி. தலைநாள்-முதல் நாள். மாது, ஓ : அசை நிலைகள். பூண்- ஆபரணம், இயலுதல்- இயங்குதல், ஓடுதல். கோடு - கொம்பு. கையகத்தது-கைக்கு அகப்பட்டது. அருந்த ஏமாந்த என்றது செய்யுள் விகாரத்தால் அருந்தேமாந்த என வந்தது. நெஞ்சம் : விளி. வாழ்க அவன் என்பது வாழ்கவன் என விகாரமாயிற்று. தாள்-முயற்சி. அவன் அடி வாழ்க என்று வாழ்த்தியதாகவும் கொள்ளலாம்.

அதியமானை மறுநாள் கண்ட ஔவையார் இந்தப் பாடலைச் சொன்னார். குறிப்பறியும் திறம்பூண்ட அவன் உடனே இந்தப் பெரும் புலமைப் பிராட்டியாருக்குரிய பரிசிலை வழங்கி விடைகொடுத்தனுப்பினான்.

இது பாடாண்டிணையில் பரிசில்கடா நிலை என்னும் துறையைச் சார்ந்தது, பரிசில் கொடுக்க வேண்டும் என்று குறிப்பாகக் கேட்கும் பொருளை உடையதாதலால் இத்துறை அப் பெயர் பெற்றது. இது புறநானூற்றில் 101-ஆவது பாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/123&oldid=1267497" இலிருந்து மீள்விக்கப்பட்டது