பக்கம்:அறப்போர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவரின் வள்ளன்மை


கொடுப்பது போலக் கொடுக்கிறோம். உனக்கு வசதி உண்டாகும்போது திருப்பிப் பெற்றுக் கொள்கிறோம். எப்போதுமே இந்த வறுமை இராது. உன் கணவர் பெரும் புலவர். அவருடைய பெருமை இன்னும் தக்கவண்ணம் மற்றவர்களுக்குப் புலனாகவில்லை. நாளைக்கே சிறந்த வள்ளல் ஒருவனுடைய நட்பு அவருக்குக் கிடைக்குமானால் பிறகு இந்த வீட்டில திருமகள் நடனமாடுவாள். இந்த வாசல் ஆனை கட்டும் வாசலாகிவிடும். அப்படி ஒருகாலம் வரத்தான் போகிறது. ஆகையால் இவற்றை வாங்கிக்கொள். உனக்குப் பொருள் கிடைக்கும்போது ஓர் இம்மியும் குறையாமல் நாங்கள் திருப்பி வாங்கிக் கொள்வோம்.”

அந்த ஏழைப் புலவரின் இல்லத்துக்கும் விருந்தினர் வந்துவிடுவார்கள். அக்காலங்களில் முகங்கோணாமல் அவர்களை உபசரித்து விருந்துணவு உண்ணச் செய்து அனுப்புவதில் சிறிதும் குறைவின்றி ஈடுபடுவாள் புலவர் மனைவி. வேண்டிய பண்டங்களை அண்டை அயலோர் தந்து விடுவார்கள்.

விருந்தினர்கள் விடைபெற்றுச் சென்ற பிறகு புலவர் தமக்கு உண்டான ஐயத்தைப் போக்கிக் கொள்ள முற்படுவார், தம் மனைவியை அழைத்து, “விருந்தினர்களுக்கு மிக இனிய

109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/127&oldid=1267501" இலிருந்து மீள்விக்கப்பட்டது