உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறப்போர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முகவுரை


தமிழ்நாட்டைக் கலைவளம் சிறந்த கருவூலமாக்கின. பசி நீங்கச் சமைத்து உண்ணும் சோறு நிறைய இருந்தது; அந்தச் சோற்றுக்குரிய நெல்லை விளைக்கும் உழுபடையின் வளம் சிறந்திருந்தது; உழுபவர் செயலைச் சிறப்பித்துப் பயன் உண்டாக்க உதவும் மேகம் அழகிய வானவில்லைத் தோற்றி மழை பொழிந்தது.

பெண்டிர் கற்பிலே சிறந்து நின்றனர். வறுமையிலும் செம்மையாக இல்லறத்தை நடத்தினர். ஏதேனும் பொருள் தம்பால் இல்லையானால் மற்றவர்களிடம் அளவு குறித்து அதை வாங்கிப் பிறகு அதைத் திருப்பிக் கொடுக்கும் வழக்கம் அப்போதும் இருந்தது. இதைக் குறியெதிர்ப்பை என்று கூறுவார்கள். இல்லத்தில் நிகழும் நிகழ்ச்சிகளுக்குரிய பொறுப்பை ஏற்று வந்தாள் மனைவி. அவளே 'மனை கிழவோய்’ என்று ஒரு புலவர் விளிக்கிறார் கருவுற்ற மகளிர் மண்ணைக் கிள்ளி உண்டார்கள்.

தெய்வ பக்தியிலே சிறந்தவர்கள் தமிழர்கள். சிவ பெருமானைப் பற்றிய பல செய்திகளை அவர்கள் தெரிந்து கொண்டிருந்தனர். தேவர் முதலிய பதினெட்டுக் கணத்தினர் உண்டு என்று நம்பினர். பசுக்களைப் பாதுகாத்தனர். அந்தணரிடமும் பெண்டிர்களிடமும் பிணியுடையவர்களிடமும் இரக்கம் காட்டினர். பிதிரரை நோக்கிச் செய்வனவற்றைச் செய்வது புதல்வர்களின் கடமை என்று நம்பினர். கற்பகப் பூஞ்சோலையை உடையது தேவலோகம் என்றும், புண்ணியம் செய்தவர்கள் அதன் பயனாக அவ்வுலகத்தை எய்தலாம் என்றும் எண்ணினர்கள். கடலும், நிலமும், திசைகளும் அளப்பதற்கு அரியன என்பது அவர்கள் நினைவு. புதுப் புள் வத்தாலும் பழம் புள் போனலும் அவற்றைத் தீய நிமித்தமாகக் கொண்டனர்.

நீரின் பெருமையை 'எல்லா உயிர்க்கும் ஏமமாகிய நீர்’ என்று புலப்படுத்துவார் ஒரு புலவர். பிறருடைய காட்டை வென்று தன்னுடையதாகக் கொண்டு பயன்

ix
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/13&oldid=1267386" இலிருந்து மீள்விக்கப்பட்டது