பக்கம்:அறப்போர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


நன்று என்று எண்ணினார் பெருஞ்சித்திரனார்.

கடைசியில் முதிரமலைக்குத் தலைவனாகிய குமணன் என்பவன் குணத்தாலும் கொடையாலும் புலவரைப் போற்றும் திறத்தாலும் சிறந்தவன் என்ற செய்தியை அவர் அறிந்தார். அவனிடம் சென்று வந்த புலவர். அனைவரும் அவனுடைய புகழை ஒரே மாதிரி சொல்வதைக் கேட்டார். அவனை அணுகித் தம் புலமையைக் காட்டிப் பரிசு பெறலாம் என எண்ணினார்.

முதிரத்துத் தலைவன் குமணனிடம் பெருஞ்சித்திரனார் சென்றார். முதிரமலையின் வளப்பத்தைக் கண்டார். பலாவும் மாவும் ஓங்கி வளர்ந்திருந்தன. பழங்கள் கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருந்தன. பிறகு குமணனையும் கண்டார்.

அம்மன்னன் புலவரை வாருங்கள் என்று கூறும்போதே அச்சொல்லில் அன்பு கலந்திருந்தது. அவன் அகமும் முகமும் மலர்ந்திருந்தன. புலவர் அங்கே முதல் முறையாக வந்தாரேனும் அவன் காட்டிய அன்பு பலகாலமாகப் பழகியவர் காட்டும் அன்பு போல இருந்தது. குமணன் அவரைப் போற்றி உபசரித்தான். நாவுக்கு இனிய உணவை அளித்தான். காதுக்கு இனிய அன்புரை பேசினான்.

112

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/130&oldid=1267504" இலிருந்து மீள்விக்கப்பட்டது