பக்கம்:அறப்போர்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


கள் தங்கிச் சென்றால் எனக்கு எவ்வளவோ இன்பம் உண்டாகும்” என்று குமணன் கூறி விடையளித்தபோது புலவர் உள்ளம் உருகியது. "வருகிறேன்" என்று சொல்லிவிட்டு வந்தார். அவர் செல்வதற்கு முன் அவர் பெற்ற பரிசிற் பொருள்கள் அவர் வீட்டுக்குச் சென்றன.

குமணன் அனுப்பிய பொருள்களை யெல்லாம் வீடு நிரம்ப வாங்கி வைத்துக் கொண்டார் புலவர். அவருடைய மனைவி அவற்றைப் பார்த்தாள். வியப்பில் மூழ்கினாள். வாய் திறந்து பேச முடியவில்லை அவளுக்கு. உணர்ச்சியினால் ஊமையானாள்.

புலவர் ஆனந்தத்தால் துள்ளிக் குதித்தார். அவருக்குத் தம் மனைவி மிக்க அல்லற்பட்டுக் குடித்தனத்தை நடத்தி வந்தது தெரியும். உறவினர்களும், பழக்கமானவர்களும், விருந்தினர்களும் வீட்டுக்கு வருவதை அவர் அறிவார். பலரிடமிருந்து பண்டங்களை அவள் அவ்வப்போது கடனாக வாங்கி, வந்தவர்களை உபசரித்து அனுப்பியதும் அவருக்குத் தெரியும். அப்போதெல்லாம் அவர் மனத்துக்குள் பட்ட வேதனை அவருக்குத்தான் தெரியும். இப்போது எல்லாத் துன்பங்களும் தீர்ந்தன.

116

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/134&oldid=1267508" இருந்து மீள்விக்கப்பட்டது