பக்கம்:அறப்போர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவரின் வள்ளன்மை


வறுமைப் பேய் கால்வாங்கி ஓடிவிட்டது. தம் மனைவியை அழைத்தார். அவளிடம் மிக்க ஊக்கத்துடன் சொல்லத் தொடங்கினார்.

“இதோ பார். இவைகள் யாவும் குமண வள்ளல் தந்தவை. பழம் தொங்கும் முதிர மலைக்குத் தலைவனாகிய அவன் நல்கிய வளத்தால் நம்முடைய வறுமை இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்துகொண்டது. இத்தனை செல்வம் இருக்கும்போது. நமக்கு என்ன குறை? எல்லோருக்கும் மனம் கொண்ட மட்டும் வாரி வழங்குவதில்தான் உயர்ந்த இன்பம் இருக்கிறது. நான் அந்த இன்பத்தை இனிச் சுவைக்கப் போகிறேன். நீயும் இரண்டு கையாலும் கொடு. உன்னை விரும்பி வந்து உன்னிடம். அன்பு காட்டி இங்கே தங்குகின்ற மகளிர் சிலர் உண்டே; அவர்களுக்கு வேண்டியதைக் கொடு. நீயாக விரும்பிச் சென்று அன்பு பாராட்டும் மகளிர் இருப்பார்கள்; அவர்களுக்கும் நிறைய வழங்கு, உனக்கு உறவினர், அவர்களைச் சார்ந்தார் யாராயிருந்தாலும் கொடு. உன் கற்புத் திறத்தை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன். பல வகையில் அது சிறந்து விளங்குவதை அறிவேன். சுற்றத்தாரும் மற்ற வரும் வந்த போது நீ நம் வறுமையை அவர்களுக்குப் புலப்படுத்தாமல் அவர்களை உபசரித்-

117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/135&oldid=1267509" இலிருந்து மீள்விக்கப்பட்டது