பக்கம்:அறப்போர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவரின் வள்ளன்மை



புலவர் தம் கூற்றைப் பாடலாகவும் அமைத்தார். மறு முறை குமணனிடம் சென்ற போது, “இங்கே பெற்ற வளத்தை நான் என்ன செய்தேன் தெரியுமா? எல்லோருக்கும் கொடுத்தேன். என் மனைவியிடமும் சொல்லி எல்லோருக்கும் கொடுக்கச் சொன்னேன்.” என்று சொல்லிப் பாட்டைச் சொன்னர்.

நின்நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்
பல்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி இர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும் -
இன்னேர்க்கு என்னுது என்னெடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னது, நீயும் -
எல்லோர்க்கும் கொடுமதி; மனகிழ வோயே!
பழம்குரங்கும் முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமணன் நல்கிய வளனே.

இந்த வீட்டுக்குத் தலைவியே, பலவகைப் பழங்கள் மாங்களில் புழுத்துத் தொங்கும் முதிர மலைக்கு உரியவனும் செம்மையான வேலையுடையவனுமாகிய குமணன் வழங்கிய இச்செல்வத்தை, கின்னே விரும்பித் தங்கும் பெண்களுக்கும், யோக விரும்பி அழைத்து வந்து வைத்துக்கொண்டி: ருக்கும் மகளிருக்கும், பல வகையில் மாட்சிமைப் பட்ட கற்பை உடைய உன்சுற்றத்தார் முதலியவர்களுக்கும், நம் சுற்றத்தின் கடும் பசி இரும்பொருட்டு உனக்கு நெடுங் லமாகக் கடன் கொடுத்தவர்களுக்கும். இன்னோருக்கு என்று யோசிக்காமல், என்னோடு சொல்லி ஆலோசனை

119

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/137&oldid=1267513" இலிருந்து மீள்விக்கப்பட்டது