பக்கம்:அறப்போர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அறப்போர்



அதோ அவர் திருமுடியின்மேல் அடையாள மாலே இருக்கிறது. ஒவ்வொரு தெய்வத்துக்கும் உரிய அடையாளமாக ஒவ்வொரு கண்ணி உண்டு. சிவபெருமானுடைய அடையாளப் பூ, கொன்றை. கொன்றை மலர்க் கண்ணியைச் சூடும் பிரான் அவர். அந்தக் கொன்றை மலர் கார் காலத்திலே மலர்ந்து மணம் வீசுவது. கார் காலத்தில் மலரும் நறுங்கொன்றையே எம்பெரு மானுக்குரிய கண்ணி.

அவருடைய திருமார்பு எவ்வளவு அழகாக இருக்கிறது! மாணிக்கம் பதித்தாற்போன்ற செவ்வண்ண மார்பம் அல்லவா? அந்த வண்ண மார்பிலே புரளும் மாலையைச் சற்றே பார்ப்போம். அந்தத் தாரும் கொன்றைதான். தலையிற் சூடும் அடையாள மாலையாகிய கண்ணியும் கொன்றை; அழகுக்கும் இன்பத்துக்குமாக மார்பிலே அணியும் மாலையாகிய தாரும் கொன்றை.

பெருமான் ஊர்ந்து வரும் ஊர்தி இடபம்; அந்த ஏறு தாய்மையை உடையது; வெண்ணிறமானது. தர்மத்தையே ஊர்தியாக ஊர்பவன் இறைவன். தர்மம் மாசு மறுவற்றது. ஆதலின் விடையும் வெண்ணிறமாக இருக்கிறது,

சிவபிரான் கொடியை ஏந்தியிருக்கிறார். அதுவும் ஓர் அடையாளம். இன்ன கொடியை உடையவர் என்று அரசரையும் பிறரையும்

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/20&oldid=1267380" இலிருந்து மீள்விக்கப்பட்டது