அருந்தவத்தோன்
ஓதுவதன் வாயிலாகச் சிவபிரான் திருக்கழுத்துக் கறையைப் போற்றுகிறார்கள்.
சிவபெருமானுக்கு உயிர்களிடத்தில் உள்ள கருணையையும், எதனாலும் அவர் அழியாத பெருமையுடையார் என்ற சிறப்பையும் வெளியிடும் அடையாளமாக அக்கறையானது மிடற்றை அணி செய்து கொண்டிருக்கிறது. அந்தக் கறையை நினைக்கும்போது அதைக் கழுத்தளவில் நிற்கும்படி செய்த உமாதேவி நினைவுக்கு வருகிறாள். அப்பெருமான் நஞ்சை விழுங்கும் போது அது திருக்கழுத்தில் நிற்கும் படி இறைவி தன் கரத்தால் தடுத்து நிறுத்தினாள் என்று புராணம் கூறும்.
சிவபிரானுடைய அருளே வடிவமான அம்மை எம்பெருமானினின்றும் வேறாக இருப்பது ஒரு நிலை. அப்பெருமானோடு ஒன்றுபட்டும் வேறாகியும் நிற்பது ஒரு நிலை. ஒன்றுபட்டே நிற்பது ஒரு நிலை. இந்த மூன்று நிலையில் பின் இரண்டையும் நினைவு கூர்கிறார் பெருந்தேவனார். ஒருபாதி எம்பிராட்டியும் ஒரு பாதி பெருமானுமாக இருக்கும் கோலம் மிகத் தொன்மையானது. அம்மை அப்பன் எனத் தனியே காணும்படி வேறாகத் தோற்றினாலும், இருவேறு உருவங்களாகத் தனித்தனியே நில்லாமையால் இந்த மாதிருக்கும் பாதியனாகிய
5