அறப்போர்
சுருண்டு திரண்டு அப் பெருமான் திருமுடியில் அடங்கிக் கிடக்கிறது. நீரைச் சேமித்து வைத்த கமண்டலம் போல, கரகம்போல, அது தோன்றுகிறது. ஆதலின் அதை நீர் அறுதலை அறியாத கரகம் என்றே சொல்லி விடலாம்.
எல்லா உயிர்களுக்கும் ஏமமாக இருக்கும் நீர் சிறிதும் அறுதலை அறியாத கரகத்தை உடைய தாழ்ந்த சடையினால் பொலிவு பெற்ற அரிய தவக் கோலத்தினராகிய சிவபிரானுக்குக் கண்ணி கொன்றை; தாருங் கொன்றை; ஊர்தி ஏறு; கொடியும் ஏறு. அவர் கழுத்தை அணி செய்வது ஒரு கறை; அந்தக் கரையை வேதம் ஓதும் வேதியர் புகழ்கின்றனர். அவருடைய ஒரு பாதியில் பெண் உருவம் உள்ளது; அதனை அவர் தமக்குள் அடக்கிவைத்துக்கொள்வதும் உண்டு. அவர் சூடிய பிறை நுதலுக்கு வண்ணமாக உள்ளது; அதைப் பதினெட்டுக் கணத்தினரும் போற்றி வழிபடுகிறார்கள்.
இப்படி நமக்குச் சிவபெருமானைக் காட்டுகிறார் பெருந்தேவனார்.
கண்ணி கார்தறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பில் தாரும் கொன்றை,
ஊர்தி வால்வெள் ஏறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப.
8