பக்கம்:அறப்போர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருந்தவத்தோன்


திருக் கோலம் முதலியன அவனருளே கண்ணாகக் கண்ட பெரியோர்களால் உணர்ந்து சொல்லப் பெற்றன. அவர் கூறியதை வரன் முறையாகத் தெரிந்து பிறர் கூறுவர். தாமே நேரிற் கண்டறியாது ஆன்றோர் கூறுவனவற்றை உணர்ந்து கூறுதலின் ‘என்ப’ என்றார். இதை எல்லாவற்றிற்கும் பொதுவாகக் கொள்ள வேண்டும்.

அணியலும் அணிந்தன்று என்பது அணி தலைச் செய்தது என்ற பொருளுடையது.

பதினெண் கணங்களைப் பலவாறு புலவர்கள் கூறுவர். தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதர், வேதாளம், தாராகணம், ஆகாச வாசிகள், போக பூமியோர் என்னும் பதினெட்டு வகையினரைச் சொல்வர் புறநானூற்று உரையாசிரியர். இவற்றிற் சிறிது வேறுபாட்டுடன் கூறுவோரும் உண்டு.

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய அருந்தவத்தோன் என்று கூட்டி, உயிர்களைக் காப்பாற்றுபவன் சிவபெருமான் என்று கொள்வதும் பொருந்தும். கரகம் என்பதற்குக் குண்டிகை என்றே பொருள் உரைப்பர் பழைய உரையாசிரியர். ‘கரகத்தாலும் சடையாலும் சிறந்த செய்-

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/29&oldid=1267403" இலிருந்து மீள்விக்கப்பட்டது