பக்கம்:அறப்போர்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


தற்கரிய தவத்தை யுடையோனுக்கு’ என்பது அவர் உரை. ‘தன்னுள் அடக்கிக் காக்கினும் கரக்கும் என்பதற்கு, அவ்வடிவுதான் எல்லாப் பொருளையும் தன்னுள்ளே அடக்கி அவ்விறைவன் கூற்றிலே மறையினும் மறையும் என்று உரைப்பினும் அமையும்’ என்று மற்றோர் உரையும் கூறுவர்

‘இப் பெரியோனை மனமொழி மெய்களால் வணங்க, அறம் முதல் நான்கும் பயக்கும் என்பது கருத்தாகக் கொள்க’ என்று கருத்துரைப்பர்.

கடவுள் வாழ்த்து என்பது புறத்துறைகளில் ஒன்றாதலால் புறத்துறைகள் அடங்கிய புறநானூற்றின் அகத்தே இது முதற் பாட்டாக அமைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/30&oldid=1267404" இருந்து மீள்விக்கப்பட்டது