பக்கம்:அறப்போர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


குள்ள அறிவை உணவு விஷயத்திலே செலுத்திச் செயல் செய்வதால் இந்த நாகரிகம் அமைகிறது. இப்படியே களைத்தபோது கிடைத்த இடத்தில் உறங்குவது விலங்கு. மனிதனோ கட்டில் தேடி மெத்தையும் தலையணையும் தேடி உறங்குகிறான். உணவை உண்டு பசி தீர்வதும் உடம்பை மறந்து உறங்கி இளைப்புத் தீர்வதும் விலங்குக்கும் மனிதனுக்கும் பொதுவாக இருந்தாலும், உண்ணுவதற் கமைந்த உணவுப் பொருளையும், உறக்கத்துக்குத் துணையான பொருள்களையும் அழகழகாக இனியவையாகக் கலைத்திறம் படைத்தனவாக அமைத்துக் கொள்ளும் அறிவு மனிதனிடம் இருக்கிறது.

மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவனுடைய அறிவு விளங்குகிறது. அவன் செய்யும் காதலில் அன்புடன் அறிவும் இருக்கிறது. அவன் மக்களை வளர்க்கும் முறையிலும் அன்போடு அறிவு விளங்குகிறது. பசுவானது தன் கன்றுக்குப் பாலூட்டுவதும் தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டுவதும் பொதுவான செய்கையே. ஆனால் தாய் அறிவுடையவளாதலின் அவள் செய்கை நாகரிகமாக இருக்கிறது.

கோபம் வந்தால் விலங்கினங்கள் தம் முள்ளே போரிடும்; ஒன்றை ஒன்று கொன்று

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/32&oldid=1267405" இலிருந்து மீள்விக்கப்பட்டது