பக்கம்:அறப்போர்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


தோன்றும். முன்னே சொன்னபடி அப்படி நினைப்பவர்கள் சிலரேயாதலால் போர் குற்றமாகவில்லை. ஆனால் போர் செய்யும்போது சில வரையறைகளை அமைத்திருப்பதால், சில முறைகள் குற்றமாக எல்லா வகையினராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

புலால் உண்பதே தவறுதான். ஆனாலும் எல்லோருமே புலால் உண்ணாமலே இருப்பது என்பது இன்றைய உலகில் நடக்கக்கூடியதாக இல்லை. அதனால் நல்லவர்கள் புலால் உண்பவர்களுக்கும் ஒரு தர்மத்தைச் சொல்லி வைத்தார்கள். ‘நீ பசுவின் புலாலை உண்ணாதே; அமாவாசையில் புலாலை உண்ணாதே’ என்று வரையறை செய்தார்கள். புலாலே உண்ணாமல் இருப்பதைவிட இந்த வரையறையின்படி நடப்பது எளிதாக இருக்கிறது. ஆதலின் இந்த நாட்டில் புலால் உண்ணுதலாகிய அதர்மம் செய்பவர்களிடத்திலும் ஒரு தர்மம், ஒரு வரையறை இருக்கிறது.

போரில் உள்ள தர்மங்கள் அல்லது வரையறைகளும் இத்தகையனவே. போரை அறவே ஒழிக்க இயலாத நிலையில், எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் எந்த முறையிலும் போரிட்டு உலகை நாசமாக்காமல் இருப்பதற்குரிய வழி துறைகளை ஆன்றோர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/37&oldid=1267410" இருந்து மீள்விக்கப்பட்டது