அறப்போர்
வகுத்தார்கள். ஆதலின் போரிலும் அறப்போர் என்ற வகை உண்டாயிற்று.
மகாத்மா காந்தியடிகள் நடத்திய அறப்போர்தான் இதுகாறும் உலகம் கண்டறியாத சிறப்புடையது. அவர் செய்த போர், அழிவை எவ்வளவு குறைவாக்கலாமோ அப்படி ஆக்கிற்று. போரில் எதிர் நின்ற இரண்டு கட்சிகளில் ஒன்று உண்மையில் போரிடவே இல்லை; அந்தக் கட்சியினரின் செயலால் எதிர்க் கட்சியாகிய ஆங்கில அரசாங்கத்தாருக்கு உயிரழிவு இல்லை. அவர்கள் தேசீயக் கட்சியினருக்குச் சிறை விதித்தார்கள். இந்த அறப்போரில் எதிர்க் கட்சியினருக்குக் கூட மனிதரை மாய்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. போர் நிகழ்ந்தது, ஆனால் உயிரழிவு இல்லை என்றால் உலகத்தில் எந்த நாட்டுச் சரித்திரத்திலும் இந்த அற்புதத்தைக் காண முடியாது. இந்த அஹிம்சா யுத்தமாகிய அறப்போரை வகுத்த சான்றோர் மகாத்மா காந்தியடிகள். அவருடைய செயல் செயற்கரியது.
பாரத தேசத்தில் பழங்காலம் முதற் கொண்டே போர் நடந்து வந்ததுண்டு. ஆனால் அந்தப் போர்களில் சில வரையறை இருந்தன. இன்ன இடத்தில் இன்ன காலத்தில், இன்ன முறையில் போர் செய்யவேண்டும். என்ற
20